×

திருட்டு வழக்கில் இருவருக்கு காப்பு

குடகு: குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகாவை சேர்ந்தவர் விக்ரம் கடந்த 12-ம் தேதி இவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் சோமவாரபேட்டை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சவுட்லு காந்திநகர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் குமார் (29) மற்றும், குஷால் நகர் தாலுகா முல்லுசோகே கிராமத்தை சேர்ந்த சுனில்குமார் (36) என்றும் இவர்கள் இருவரும் விக்ரமின் பைக்கை திருடியது தெரியவந்தது.இதுமட்டுமின்றி, சோமேஷ்வர ஆஞ்சனேயர் கேயிலில் உண்டியல் திருட்டு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்து. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், 2 லட்சம் மதிப்பிலான 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மாவட்ட எஸ்பி ஐயப்பாவின் தலைமையில். மாவட்ட டிஒய்எஸ்பி சைலேந்திரகுமார், அவர்களின் மேற்பார்வயைில் திருடர்கள் பிடிபட்டுள்ளனர்….

The post திருட்டு வழக்கில் இருவருக்கு காப்பு appeared first on Dinakaran.

Tags : Kudagu ,Taluga, Somawarapet, Kudagu district ,Kunagu District Somwarapetta ,Dinakaran ,
× RELATED கிராமத்திற்குள் புகும் வனவிலங்குகள்: அச்சத்தில் பொதுமக்கள்