×

கிராமத்திற்குள் புகும் வனவிலங்குகள்: அச்சத்தில் பொதுமக்கள்

குடகு: மாவட்டத்தில் நாளுக்கு நாள் புலியின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் கிராமத்திற்குள் புகுந்து கன்று குட்டியை கொன்று மனிதர்களை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகளை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். குடகு மாவட்டத்தில் நாளுக்கு நாள் புலியின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் புலியின் தாக்குதலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ள நிலையில் கால்நடைகளையும் கொன்று மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பனாங்கல் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்த புலி  கோவிந்த் என்பவரின் கன்று குட்டியை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கன்று குட்டி  உயிரிழந்த நிலையில் கிராமத்திற்குள் புகும் புலி, சிறுத்தை, காட்டு யானைகளை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்ைக வைத்தனர்….

The post கிராமத்திற்குள் புகும் வனவிலங்குகள்: அச்சத்தில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Kudagu ,Tiger Atakasam ,
× RELATED திருட்டு வழக்கில் இருவருக்கு காப்பு