×

கவின், யுவன், இளன் இணையும் ஸ்டார்

சென்னை: கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஸ்டார்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிவிஎஸ்என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ஸ்டார்’. ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கதையின் நாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரமாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் யுவன் இசையில் வெவ்வேறு விதமான பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் கூறுகின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31ம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொலி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

The post கவின், யுவன், இளன் இணையும் ஸ்டார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gavin ,Yuvan ,Ilan ,CHENNAI ,Rise East Entertainment ,Sri Venkateswara Cine Chitra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரிட்டன் தேர்தலில் வெற்றி...