×

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்கள்

கோத்தகிரி :  சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் துங்கிய நிலையில் இதமான காலநிலை நிலவி வருவதால் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும். ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தும் வேலியாகவும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூத்து, மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும். தற்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் ஜகரண்டா மலர்கள் பூத்து உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் படம் பிடித்து, செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்….

The post கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Jakaranda Flowers Booth ,Kotakri-Matupalayam Road ,Gothagiri ,Nilgiri ,Jakaranda Flowers ,Kotakri-Mattupalayam Road ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு