×

சோனியா உத்தரவால் பஞ்சாப் தலைவர் சித்து ராஜினாமா

சண்டிகர்:  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஜீவன் ஜோத் கர்ரிடம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த 5 மாநில காங்கிரஸ் தலைவர்களையும் பதவி விலக வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சித்து தனது டிவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் விருப்பப்படி நான் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார்….

The post சோனியா உத்தரவால் பஞ்சாப் தலைவர் சித்து ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Sonia Uttarawal ,Punjab ,President ,Sidhu ,Chandigarh ,Congress party ,5 ,Uttar Pradesh ,Uttarakhand ,Goa ,Manipur ,Sidhu Resignation ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்