×

எம்.எஸ்.ஆர். சர்க்கிள் வளைவில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாய்: ஸ்லாப் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர்: சித்தூர் எம்.எஸ்.ஆர். சர்க்கிள் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது: சித்தூர் மாநகரத்தில் மையப் பகுதியில் எம்.எஸ்.ஆர். சர்க்கிள் உள்ளது. இந்த சர்க்கிள் வழியாக சென்னை, வேலூர், திருப்பதி, பெங்களூர், திருத்தணி உள்ளிட்ட ஊர்களுக்கு நாள்தோறும் 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த எம்.எஸ்.ஆர். சர்க்கிள் வளைவில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஏராளமான வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வரும்போது கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியாமல் கழிவுநீர் கால்வாயில் விழுந்து எழுந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது கழிவுநீர் கால்வாயில் விழுந்து விட்டார். பலத்த காயமடைந்த அவர் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்று கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை இந்த கழிவுநீர் கால்வாயில் விபத்துக்குள்ளாகி வருகிறது. இதுகுறித்து ஏராளமான வாகன ஓட்டிகள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கழிவுநீர் கால்வாய் மீது காங்கிரீட் ஸ்லாப் அமைத்து போக்குவரத்துக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியாவது விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்….

The post எம்.எஸ்.ஆர். சர்க்கிள் வளைவில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாய்: ஸ்லாப் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : MM S.S. R.R. Sewage canal ,Chittoor ,M. S.S. R.R. Motorists ,Circle ,M. S.S. R.R. Sewage ,Circle Ramp ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும்...