×

விதிமீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல் புளியரை செக் போஸ்ட்டில் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம்: எஸ்.பி. அதிரடி

செங்கோட்டை: புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு எம்சாண்ட் மற்றும் சிமென்ட்  உள்ளிட்ட கனிம வளங்களை விதிமீறி  எடுத்துச்சென்ற வாகனங்கள் தடுத்து  நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன. இதனால் சோதனை சாவடியில் வாகனங்கள்  நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தமிழகத்திலிருந்து  கேரளாவுக்கு பால், காய்கறி, பூக்கள், சிமென்ட் போன்ற பல்வேறு அத்தியாவசிய  பொருட்கள் அன்றாடம் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம்  தென்காசி மாவட்டம்  புளியரை சோதனைச்சாவடி வழியாக கொண்டு செல்லப்படுகின்றன, இதேபோல்  பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிடட சந்தைகளிலிருந்து  காய்கறிகள்  கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் கேரளாவில்  திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவரும் துறைமுக கட்டுமான பணிக்காக தமிழகம்  வழியாக எம்சாண்ட் மற்றும் கருங்கல் உள்ளிட்ட கனிமங்கள் விதிமுறை மீறி  வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. எம்சாண்ட் உள்ளூர் பகுதி  மக்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுபோல் ஜல்லி கற்கள்  குறிப்பிட்ட அளவுதான்  வாகனங்களில் எடுத்து செல்லப்பட வேண்டும்  என்ற  கட்டுப்பாடு உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை  என கூறப்படுகிறது. இதையடுத்து புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு  நாள்தோறும் எம்சாண்ட், கருங்கற்கள் விதிமுறைமீறி கொண்டு  செல்லப்படுவதாகவும், இதனால் தென்காசி, புளியரை, செங்கோட்டை பகுதிகளில்  சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும் புகார்கள் வந்தன. தமிழக-கேரள  எல்லையான புளியரை சோதனை சாவடி வழியாக  தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்  அதிகப்படியான எடையுடன் கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுக்க தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் புளியரை சோதனை சாவடியில் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில்  அதிக அளவில் கனிம வளங்கள்  ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.  வாகனங்கள் எடையிட்டு அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்பட்டது. சராசரியாக ஒரு  வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் அதிக எடை ஏற்றிச்சென்ற வாகனத்திற்கு  ஒரு டன்னுக்கு 1000  ரூபாய் என ஒரு வாகனத்துக்கு சுமார் ரூ.13 ஆயிரம் முதல் 22  ஆயிரம் வரை அபராதம்  விதிக்கப்பட்டது.  காலை 8 மணி வரை ஏராளமான வாகனங்கள் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் லாரிகள்  புளியரை சோதனை  சாவடியில் இருந்து புதூர் பேரூராட்சி வரை நீண்ட வரிசையில்  சாலையோரங்களில்  நிறுத்தப்பட்டுள்ளன.  பல லாரிகளில் டிரைவர்கள்  லாரியை  நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டனர். இதனால்  லாரிகளை  அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அளவுக்கு மீறி கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 42 வாகனங்களுக்கு மொத்தம் 6லட்சத்து 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது….

The post விதிமீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல் புளியரை செக் போஸ்ட்டில் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம்: எஸ்.பி. அதிரடி appeared first on Dinakaran.

Tags : Keralava ,Bliyar ,Czech ,Post ,Chengkotta ,Kerla ,Thiriya ,
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி