×

சீதையாக நடிக்க அலியா பட் திடீர் மறுப்பு

மும்பை: ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க ஒப்புக்கொண்ட அலியா பட், திடீரென படத்திலிருந்து விலகியுள்ளார். ராமாயணம் கதையை தழுவி ‘ஆதிபுருஷ்’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. பிரபாஸ் நடித்திருந்த இப்படம் சர்ச்சைக்குள்ளானது. ராமர், அனுமாரை படத்தில் சரியாக காட்டவில்லை. இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் படம் இருந்ததாக புகார் எழுந்தது. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.223 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமாயணம் கதையை மீண்டும் படமாக்க பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள் சிலர் முன்வந்துள்ளனர். ஆமிர்கானின் தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி, இப்படத்தை இயக்குகிறார்.

இதில் ராமராக நடிக்க ரன்பீர் கபூர், சீதையாக நடிக்க அலியா பட், ராவணனாக நடிக்க ‘கேஜிஎஃப்’ புகழ் யஷ் ஒப்பந்தமானார்கள். இப்படத்தின் போட்டோ ஷூட்டிற்கு மட்டும் ரூ.3 கோடி செலவிட்டு படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென இப்படத்திலிருந்து அலியா பட் விலகியுள்ளார். ராமராக தனது காதல் கணவர் ரன்பீர் கபூர் நடித்தாலும் இதில் தான் நடிக்க முடியாது என அவர் வெளியேறியுள்ளார். படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க ேததிகள் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் இது நம்பும்படியான காரணமாக இல்ைல என பாலிவுட் மீடியா கூறி வருகிறது.

The post சீதையாக நடிக்க அலியா பட் திடீர் மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Alia Bhatt ,Sita ,Mumbai ,Prabhas ,Ram ,Anumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்