×

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தனது கடிதத்தை சோனியா காந்திக்கு சித்து அனுப்பினார். உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து சித்துவும் ராஜினாமா செய்தார். சோடங்கர் (கோவா), கணேஷ்கொடியால் (உத்தராகண்ட்), அஜய்குமார் லல்லு (உ.பி.) ஏற்கனவே ராஜினாமா செய்தனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார். கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார்.  சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 5 மாநிலங்களில் சட்டப்போரவை தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப், கோவா, உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 4 மாநிலங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடங்களிலும் பெறும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த  தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் 5 மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், கட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜினாமா செய்து கடிதத்தை சோனியா காந்தியிடம் அளித்தனர்….

The post 5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து appeared first on Dinakaran.

Tags : 5 ,Election Results ,Echoing ,Punjab State ,Congress ,Nawjot Singh Sidhu ,Punjab ,Navjot Singh Sidhu ,President ,Punjab State Congress ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு