×

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், பள்ளிகள் திறப்பு : ஹிஜாபுடன் வந்த மாணவிகள் அதனை அகற்றிய பின்பே வகுப்புகளுக்கு செல்ல அனுமதி!!

பெங்களூரு : ஹிஜாப் வழக்கின் தீர்ப்புக்கு பிறகு கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் வழக்கம் போல கல்வி நிலையங்களுக்கு வருகை தந்தனர். கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என்று நேற்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்று கருத்து தெரிவித்து இருந்தது. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்று விமர்சித்து இருந்த நீதிபதிகள், கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதனையடுத்து உடுப்பி மாவட்டத்தில் காலை முதல் மீண்டும் வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் வழக்கம் போல வகுப்புகளுக்கு சென்றனர். மாணவிகள் சிலர் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த போதிலும் ஹிஜாபை நீக்கிய பின்னரே வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டாலும் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவும் பொது இடங்களில் போராட்டம், கொண்டாட்டங்கள், கூட்டம் கூட விதிக்கப்பட்ட தடை உத்தரவும் 21ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், பள்ளிகள் திறப்பு : ஹிஜாபுடன் வந்த மாணவிகள் அதனை அகற்றிய பின்பே வகுப்புகளுக்கு செல்ல அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Hijab ,Bengaluru ,Karnataka ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்