- நைவேலி என். எல்.
- வடக்கு வல்லூர்
- கடலூர்
- நைவேலி என்.
- ஆர்.சி.
- வடத்துவளூர்
- கடலூர் மாவட்டம்
- சாலை பரபரப்பு
- தின மலர்
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக வடக்குவெள்ளூர் கிராமத்தில் வீடுகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பெருமளவில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.என்.எல்.சி முதலாவது சுரங்கம், சுரங்கம் விரிவாக்கம் இரண்டாம் சுரங்கம் உள்ளிட்ட சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து என்.எல்.சி நிறுவனம் நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்துவதற்காக அறிவிப்பு விடுத்தது. இந்தநிலையில் தற்போது வடக்குவெள்ளூர் கிராமத்தில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்குவெள்ளூர் செல்லும் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிராமத்திற்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து பெண்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …
The post நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக பணிக்கு எதிர்ப்பு.: வடக்குவெள்ளூர் கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
