×

₹70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்-தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

திருமலை : சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அண்ணதம்மு பண்டா அருகே  20 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், சந்திரகிரி மண்டலம் சாமலா வனப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதியில்  செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர். திருப்பதி அதிரடிப்படை எஸ்.பி. சுந்தர ராவ் தலைமையில் டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில் ஆர்.ஐ. சுரேஷ்குமார்,  ஆர்.எஸ்.ஐ. லிங்கதர் குழுவினர் சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். சுற்றுவட்டார பகுதியான அண்ணதம்முலா பண்டா அருகே சென்றனர். அப்போது சிலர் செம்மரக் கட்டைகளை தோளில் சுமந்தபடி சென்றனர். உடனே, போலீசார் பிடிக்க சென்றனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் செம்மரங்களை ஆங்காங்கே வீசிவிட்டு சென்றனர். இதில்  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (30) என்ற கூலி தொழிலாளியை கைது செய்து அந்த பகுதியில் இருந்த ₹70 லட்சம் மதிப்புள்ள சுமார் ஒரு டன் எடையுள்ள 20 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரித்து வருகிறார்.  இதேபோல் சந்திரகிரிமண்டலம் சாமல  வனப்பகுதியில் செல்ல முயன்ற  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (35), பெருமாள் (42) ஆகியோரை கைது  செய்து கோடாரி, ரம்பம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை பிடிக்க வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்  தெரிவித்தார்….

The post ₹70 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்-தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirumala ,Annathammu Banda ,Seshachalam ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து