×

தெலங்கானாவில் பரபரப்பு: குழந்தையின் தலையை கவ்வி ஓடிய நாய்

திருமலை: குழந்தையின் தலையை தெரு நாய் கவ்வி சென்ற கொடூரம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத், வனஸ்தலிபுரத்தில் உள்ள சஹாரா எஸ்டேட்ஸ் சாலையில் நேற்று சிலர் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியாக தெரு நாய் ஒன்று ஏதோ ஒரு பொருளை வாயில் கவ்வியபடி ஓடியது. இதை கவனித்தபோது குழந்தையின் தலை என்பதை அறிந்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கிருந்த எல்.பி. நகரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அப்பகுதியினர் சேர்ந்து நாயை துரத்தினர். இதனையடுத்து நாய் குழந்தையின் தலையை தரையில் போட்டுவிட்டு ஓடியது.இதுகுறித்து வனஸ்தலிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், குழந்தையின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த குழந்தை யாருடையது, கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தை வீசப்பட்டதா அல்லது குறை பிரசவத்தின்போது இறந்ததால் சரியாக புதைக்கப்படாததால் தெருநாய் தலையை துண்டித்து எடுத்து சென்றதா என்று விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்….

The post தெலங்கானாவில் பரபரப்பு: குழந்தையின் தலையை கவ்வி ஓடிய நாய் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Telangana State ,Hyderabad ,Vanasthalipuram ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்...