×

சொந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு: பிரபல நடிகர் துல்கர் சல்மானுக்கு தியேட்டர் உரிமையாளர் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். நடிகர் மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு பின்னர் துல்கர் சல்மான் நடித்து வெளியான ‘குருப்’ படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் துல்கர் சல்மான் சொந்தமாக தயாரித்து நடித்த சல்யூட் என்ற படத்தை ஓடிடியில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார். இதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் விஜயகுமார் கூறியதாவது; இந்த படத்தை தியேட்டர்களுக்கு தருவதாக துல்கர் சல்மான் எங்களிடம் உறுதி அளித்திருந்தார். தற்போது ஓடிடியில் வெளியிட தீர்மானித்துள்ளார். இதை ஏற்க முடியாது. எனவே இனி வரும் துல்கர் சல்மானின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது….

The post சொந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு: பிரபல நடிகர் துல்கர் சல்மானுக்கு தியேட்டர் உரிமையாளர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tulkar Salman ,Thiruvananthapuram ,Mammootty ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்