×

ஜவான் படத்துக்கு 6 சர்வதேச ஸ்டன்ட் இயக்குனர்கள்

மும்பை: ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான 6 சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இதுகுறித்து படக்குழுவினர் கூறியது: ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, உற்சாகமூட்டும் பைக் காட்சிகள், இதயத்தை தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள் என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் ஆறு வெவ்வேறு அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாகும்.

ஸ்பிரோ ரஸாடோஸ்- ‘தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டில்ஸ்’ போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியவர். யானிக் பென்- ‘டிரான்ஸ்போர்ட்டர் 3’, ‘டன்க்ரிக்’, ‘இன்செப்ஷன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்துள்ளார். கிரேட் மேக்கரே- ‘மேட் மேக்ஸ் : ப்யூரி ரோடு’, ‘அவெஞ்சர்ஸ் :ஏஜ் ஆப் அல்ட்ரான்’ போன்ற படங்களுக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்தவர். கெச்சா காம்பக்டீ – ‘துப்பாக்கி’, ‘பாகுபலி 2’ போன்ற படங்களுடன் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

The post ஜவான் படத்துக்கு 6 சர்வதேச ஸ்டன்ட் இயக்குனர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jaawan ,MUMBAI ,Shah Rukh Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு