×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமாவுக்கு சாகும் வரை சிறை

புதுக்கோட்டை: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது விடுமுறையையொட்டி, சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கணக்கன்காட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு அவரது தாய் அனுப்பி வைத்தார். அங்கு சிறுமியின் தாய் மாமா முருகேசன்(36), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி சத்யா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமாவுக்கு சாகும் வரை சிறை appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Thanjam district ,
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை...