×

தூத்துக்குடியில் பயங்கரம்; கடற்கரையில் வாலிபர் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் இன்று அதிகாலை வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜபாளையம் கடற்கரை பகுதி, மொட்டைக் கோபுரம் ஏரியாவில் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் பின்னந்தலை உள்பட உடலின் பல்ேவறு இடங்களில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த டவுன் டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து உடலை கடலில் வீசியிருக்கலாம் என்றும், கரையில் உடல் ஒதுங்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post தூத்துக்குடியில் பயங்கரம்; கடற்கரையில் வாலிபர் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thuthukudi ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்