×

லண்டனில் புது பங்களாவில் குடியேறுகின்றனர்: ஹாலிவுட் நடிகருடன் எமி ஜாக்சன் காதல் திருமணம்

 

சென்னை: பல மொழி படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வரும் எமி ஜாக்சன், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை தீவிரமாக காதலித்த அவருக்கு உடனே நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர்கள் திருமணம் நடப்பதற்கு முன்பு, கடந்த 2019ல் எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர்சூட்டினார்கள். பிறகு ஜார்ஜ் பனயிட்டோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு எமி ஜாக்சன் பிரிந்தார்.

தற்போது ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலிக்கிறார். விரைவில் அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில், லண்டனுக்கு அருகிலுள்ள கிராமத்தில் பங்களா வாங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வாங்கிய அந்த பங்களாவை 3 மாதங்களாக மறுசீரமைப்பு செய்து புதுப்பித்துள்ளனர். இத்தகவலை அந்த பங்களாபுல்வெளியில் உற்சாகமாக நடந்து செல்லும் போட்டோவுடன் வெளியிட்டுள்ள எமி ஜாக்சன், தனது திருமண தேதி குறித்து இன்னும் கூட அறிவிக்கவில்லை.

The post லண்டனில் புது பங்களாவில் குடியேறுகின்றனர்: ஹாலிவுட் நடிகருடன் எமி ஜாக்சன் காதல் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : London ,Amy Jackson ,Hollywood ,CHENNAI ,Arun Vijay ,AL Vijay ,George Panaito ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை