×

மதுரையில் ரூ.5.66 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனியாருக்கு பதிவு சார்பதிவாளர் மீது வழக்கு

மதுரை: மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக, ராஜகம்பீரம் பகுதியில் உள்ள நிலத்தை கடந்த 2019, டிசம்பரில் மதுரை, ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் கோயில் அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்றிதழை பெறாமல் தனியார் பெயரில் பதிவு செய்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் முன்னாள் சார்பதிவாளர் பாலமுருகன் மீது கடந்த 2 நாள்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்தனர்.போலீசார் கூறும்போது, ‘‘முதற்கட்ட விசாரணையில் ஒத்தக்கடையில் பாலமுருகன் சார்பதிவாளராக இருந்தபோது, பத்திரப்பதிவு ஆணையரின் உத்தரவை மீறி ரூ.5.66 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை பதிவு செய்ய தனியாருக்கு உதவியதால், இந்துசமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர். புகாருக்குள்ளான பாலமுருகன், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக தற்போது பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது….

The post மதுரையில் ரூ.5.66 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனியாருக்கு பதிவு சார்பதிவாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurah ,Madurai ,Meenatsiyamman Temple ,Rajagamparam ,Aasakkada ,Maduram ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை