×

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் படோசா: ஒசாகா அதிர்ச்சி தோல்வி

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் பவுலா படோசா (ஸ்பெயின்) தகுதி பெற்றார். 2வது சுற்றில் செக் குடியரசின் தெரசா மார்டின்கோவாவுடன் மோதிய படோசா 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. படோசா தனது தொப்பியில் உக்ரைன் கொடியுடன், ‘போர் வேண்டாம்’ என்ற வாசகத்தையும் எழுதியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.மற்றொரு 2வது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா 0-6, 4-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), மேரி பவுஸ்கோவா (செக்.), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா), மரியா சாக்கரி (கிரீஸ்), பெத்ரா குவித்தோவா (செக்.) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.தப்பினார் நடால்: இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-2, 1-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை போராடி வென்றார். மற்றொரு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-5), 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜாக் சாக்கை வீழ்த்தினார். நம்பர் 1 வீரர் மெட்வதேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), யானிக் சின்னர் (இத்தாலி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), கேமரான் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் 3வது சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்….

The post பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் படோசா: ஒசாகா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Patosa ,Osaka ,BNP BARIFA Open tennis ,Division ,BNP PARIFA Open ,United States ,BNP Bariba Open ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது...