×

கொடைக்கானலை விடாமல் மிரட்டும் காட்டுத்தீ பல நூறு ஏக்கர் அரிய மரங்கள் சாம்பல்-புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை கூக்கால் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீ, தொடர்ந்து பரவி வருகிறது. இதில் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகின. புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதி அருகே காட்டுத்தீ பற்றி எரிவதால், அப்பகுதியில் உள்ள விலங்குகளும் கருகி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் ஆங்காங்கு காய்ந்த சருகுகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்து வருகிறது. 3 நாட்களுக்கு முன்பு, கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ பற்றியது. இதில் நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த, அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகின. வன விலங்குகளும் உயிரிழந்தன. தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பின்னர், நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதற்கிடையே கொடை க்கானல் அருகேயுள்ள மேல்மலை கூக்கால் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து அப்பகுதியில் மளமளவென பரவிய தீ, கடந்த 3 நாட்களாக ெதாடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் காற்றின் வேகத்தில் பலநூறு ஏக்கர் வனப்பகுதியில் உள்ள விலையுயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து வருகின்றன. மேலும் தீப்பற்றி எரியும் பகுதி அருகே புலிகள் சரணாலயம் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவற்றின் நிலை குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது. வனத் துறையினரிடம் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உரிய உபகரணங்கள் மற்றும் போதிய பணியாளர்கள் இல்லை என கொடைக்கானல் பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்….

The post கொடைக்கானலை விடாமல் மிரட்டும் காட்டுத்தீ பல நூறு ஏக்கர் அரிய மரங்கள் சாம்பல்-புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Gookal forest ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வேன் விபத்து