ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அருகே வெங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், தாமரைப்பாக்கம் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைய உள்ள இடத்தை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆய்வு நடத்தினார். தாமரைப்பாக்கம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள வெங்கல் கிராமத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 60 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அமைய உள்ளது. அதற்கான இடத்தை ஆ.கிருஷ்ணசாமி நேரில் சென்று பார்வையிட்டு இடத்தை தேர்வு செய்தார். பின்னர், தாமரைப்பாக்கம் கூட்டு சாலை அமணம்பாக்கம் பகுதியில் அமைய உள்ள போக்குவரத்து பணிமனை இடத்தையும் ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து, தாமரைப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொகுதி நிதி ₹20 லட்சம் செலவில் அமைய உள்ள பஸ் நிறுத்தம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது, எல்லாபுரம் பிடிஒ ராஜேஸ்வரி, திமுக எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, அவைத்தலைவர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி டி.பாஸ்கர், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம், சீனிவாசன், தர், கிராணசுந்தரம், இளவழகன் உட்பட பலர் உடன் இருந்தனர்….
The post சுகாதார நிலையம், பஸ் நிறுத்தம் அமையவுள்ள இடங்களை எம்எல்ஏ நேரில் ஆய்வு appeared first on Dinakaran.