×

அனுஷ்கா திருமணம் எப்போது?

 

ஐதராபாத்: ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்துக்காக உடல் எடை கூடியிருந்த அனுஷ்கா, பிறகு தன் உடல் எடையைக் குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். தொடர்ந்து பல படங்
களில் நடித்த அவரது உடல் எடை அவ்வப்போது கூடியும், குறைந்தும் காணப்பட்டது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம், ‘நிசப்தம்’. இதிலும் அவர் உடல் எடை கூடியிருந்தார். இந்நிலையில், மகேஷ் பாபு இயக்கத்தில் நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற பன்மொழிப் படத்துக்காக தீவிர உடற்பயிற்சிகள் செய்து, உணவுக்கட்டுப்பாடு கடைப்பிடித்து அனுஷ்கா தன் உடல் எடையைக் கணிசமாக குறைத்துள்ளார். இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதில் ஹீரோவாக நவீன் பாலி ஷெட்டி, முக்கிய கேரக்டர்களில் ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவு பெறாததால் திடீரென்று இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 7ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால், இந்த ஆண்டு அனுஷ்காவின் திருமணம் நடக்காது என்று தெலுங்கு படவுலகில் கூறப்படுகிறது. இதுகுறித்து அனுஷ்கா தரப்பு பதில் அளிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருக்கிறது.

The post அனுஷ்கா திருமணம் எப்போது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anushka ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா