×

காரைக்கால் அருகே மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

காரைக்கால் : காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜெயசங்கர் தலைமை வகித்தார். தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா வரவேற்றார். பின்னர் பேசிய கால்நடை துறை தொழில்நுட்ப வல்லுநர் கோபு, சுயஉதவி குழுக்களின் சாதனைகள் பற்றியும், சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம் குறித்தும் விளக்கினார். காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை குழுமத்தின் செயலாளர் ஜெயந்தி பேசுகையில், மகளிர் மேம்பாடு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாய் அமையும், எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிந்து இலக்கை நோக்கி முன்னேறி சென்று வெற்றி பெறவேண்டும் என்றார்.வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அலுவலர் மகேஷ், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, தொழில் முனைவர்களாக மாறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். திருநள்ளாறு வங்கி கிளை மேலாளர் சோபனா மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று சிறு மற்றும் குறு தொழில் தொடங்கி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் மனையியல் உதவிப் பேராசிரியர் வண்டார்குழலி ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் பற்றியும், நல்லம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் திவ்யா மகளிர் எதிர்கொள்ளும் உடல்ரீதியான நோய்களை பற்றியும், அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர், மகளிர்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் அரவிந்த் மற்றும் கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நன்றி கூறினார்….

The post காரைக்கால் அருகே மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகளிர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Mathur Agricultural Sciences Station ,Karaikal Karaikal ,Mathur Agri Sciences Station ,Karaikala ,Madur Agricultural Sciences Station ,Karaikal ,Dinakaran ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்