×

மீண்டும் ஹீரோவான ஹரீஷ் உத்தமன்

சென்னை: கடந்த 2010ல் திரைக்கு வந்த ‘தா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்த ஹரீஷ் உத்தமன், பிறகு பல்வேறு மொழிப் படங்களில் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத் திரங்களிலும் நடித்து வரு கின்றார். தற்போது மீண்டும் அவர் ஹீரோ வாக நடித்துஉள்ள படம், ‘நூடுல்ஸ்’. இப்படத்தின் மூலம் நடிகர் ‘அருவி’ மதன் இயக்குனராக அறிமுகமாகிறார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஷீலா ராஜ்குமார், ஆழியா, ‘அருவி’ மதன், திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்ய, ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ், வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. இப்படம் குறித்து ‘அருவி’ மதன் கூறுகையில், ‘இரண்டே நிமிடங்களில் பரிமாறக்கூடிய உணவு நூடுல்ஸ். இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலபேருக்கு பல நேரங்களில் நடந்திருக்கிறது. அந்த இரண்டு நிமிடங்களில் ஹீரோ எடுத்த முடிவால், ஹீரோயின் செய்த செயலால் அவர்களின் குடும்பமே காவல்துறை அதிகாரியிடம் சிக்கிக்கொள்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை’ என்றார்.

The post மீண்டும் ஹீரோவான ஹரீஷ் உத்தமன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Harish Uthman ,Chennai ,Harish Uthdaman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...