×

சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.39 லட்சம் அபராதம்

புழல்: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது, ஜிஎன்டி சாலையில் அதிவேகமாக சென்ற வாகனங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய வாகனங்கள் குறித்து துல்லியமாக அறிய பிரத்யேக வாகன வேக அளவீட்டு கருவியைப் பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது. இதில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன் பயன்பாடு, உரிய அனுமதி சான்று இல்லாத வாகனம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஒளிர்விப்பு ஸ்டிக்கர் ஒட்டாதது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய வாகனங்கள் என 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹1.39 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது….

The post சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.39 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai-Kolkata National Highway ,Sengunram District Traffic Officers ,Dinakaran ,
× RELATED பாடியநல்லூர் சோதனை சாவடியில்...