×

பாடியநல்லூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்த வாகனங்களை பொது ஏலம் விட கோரிக்கை

புழல்: சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகனங்கள், திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை சாவடி பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வீணாகி வருகிறது.

எனவே, பறிமுதல் செய்யப்பட்ட கார், லாரி மற்றும் பைக்குகளை ஏலம்விட்டு அரசுக்கு வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாடியநல்லூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணிகளில் இருக்கும் போலீசார் கூறியதாவது;
பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் அந்த இடத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொசு தொல்லைகளாலும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். போலீஸ் உயரதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம். எனவே, வீணாகிவரும் அனைத்து வாகனங்களையும் பொது ஏலத்தில் விட்டால் பொதுமக்கள் பயனடைவார்கள். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். எனவே, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

The post பாடியநல்லூர் சோதனை சாவடியில் பறிமுதல் செய்த வாகனங்களை பொது ஏலம் விட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Badianallur ,Chennai-Kolkata National Highway ,Chennai Vertical ,Dinakaran ,
× RELATED லாரி மோதி முதியவர் பலி