×

தாம்பரம் மாநகராட்சியில் மெட்ரோ ரயில் பணி துவக்கம்: மேயர் வசந்தகுமாரி தகவல்

தாம்பரம்: தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் நேற்று தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணைமேயர் கோ.காமராஜ் ஆகியோருக்கு பீர்க்கன்காரணை-பெருங்களத்தூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர், துணைமேயருக்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரபூபதி, சக்தி நாராயணன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர மேயர் வசந்தகுமாரி பேசுகையில், பெருங்களத்தூர் மேம்பால பணிகளை விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சென்னை விமானநிலையம் வரையுள்ள மெட்ரோ ரயில் சேவையை தாம்பரம் மாநகராட்சிக்கு விரிவுபடுத்தும் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. மேலும், வருங்காலங்களில் தாம்பரம் மாநகராட்சியில் வெள்ளநீர் சூழாத அளவுக்கு மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படும் என்றார்….

The post தாம்பரம் மாநகராட்சியில் மெட்ரோ ரயில் பணி துவக்கம்: மேயர் வசந்தகுமாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,Rail ,Tambaram Corporation ,Mayor ,Vasantakumari ,Tambaram ,Birkankaranai- ,Perungalathur ,Vasantakumari Kamalakannan ,Deputy ,Ko. Kamaraj ,
× RELATED போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...