×

தமிழ்நாடு வேளாண் பல்கலை பொதுக்கலந்தாய்வில் 2,744 இடங்கள் நிரம்பின: நாளை இரண்டாம் கட்ட கவுன்சலிங்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உறுப்பு கல்லூரிகளில் 1,960 இடங்கள், இணைப்பு கல்லூரிகளில் 2,337 இடங்கள் என மொத்தம் 4,297 இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலந்தாய்வு கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. அதன்படி, சிறப்பு பிரிவு மாணவர்கள், தொழிற்முறை கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற 7.5 சதவீத மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் சுமார் 500 இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடந்தது. இதில், 8,500 பேர் பங்கேற்றனர். மேலும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், சாதி பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் 3,642 பேருக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், 2,744 மாணவ, மாணவிகள் பங்கேற்று உரிய கல்வி கட்டணத்தை செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்தனர். சிறப்பு பிரிவு கலந்தாய்வு நீங்கலாக, பொதுக்கலந்தாய்வின் மூலம் மொத்தம் 2,744 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, காலியாக உள்ள 898 இடங்களை நிரப்ப 2ம் கட்ட கவுன்சலிங் நாளை நடக்கிறது….

The post தமிழ்நாடு வேளாண் பல்கலை பொதுக்கலந்தாய்வில் 2,744 இடங்கள் நிரம்பின: நாளை இரண்டாம் கட்ட கவுன்சலிங் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Agricultural University ,Development ,Govay ,Tamil Nadu Agricultural University Public Kolandai ,
× RELATED எம்எல்ஏ துவக்கி வைத்தார் இயற்கை...