ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2006ல் புதுஆயக்குடியைச் சேர்ந்த பதுருதீன் என்பவர், மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய வழக்கில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த குற்ற வழக்கிற்கு நேற்று பழநி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பதுருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், ஒருவர் இறந்து விட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்….
The post மானை சுட்டவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
