×

மகனை இழந்து வாடும் இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகி இருப்பார் என்று நினைக்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது : முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை : திமுக மாநிலங்களவை எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன்  ராகேஷ்(22)  விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துபட்டு மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது மாடு குறுக்கே வந்ததால் , கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டைகள் மோதி விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராகேஷுடன் சென்ற நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , ‘கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அவர்களின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளானேன்.  ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கழக  குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.  இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில் ,அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகி இருப்பார் என்று நினைத்து பார்க்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் இளங்கோவிற்கும் ,  அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்….

The post மகனை இழந்து வாடும் இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகி இருப்பார் என்று நினைக்கவே உடலும், உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது : முதல்வர் ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : stalin ,Chennai ,Kanjagam States B., N.P. R.R. ,President ,Ilango ,CM ,