×

விஷ்ணுவர்தன்-சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

தமிழ் சினிமாவில் 2002ல் வெளிவந்த ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அடுத்து அவர் இயக்கிய ‘அறிந்தும் அறியாமலும்’ படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அஜித் நடித்த ‘பில்லா’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து ‘சர்வம், ஆரம்பம், யட்சன்’ ஆகிய படங்களை இயக்கினார்.

அவர் தமிழில் கடைசியாக இயக்கிய ‘யட்சன்’ படம் சரியாகப் போகவில்லை. ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஹிந்திப் படமான ‘ஷெர்ஷா’ கொரானோ தாக்கம் காரணமாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் அதிக அளவில் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என படத்தை வெளியிட்ட அமேசான் அறிவித்தது. பிலிம்பேர் உள்ளிட்ட சில விருதுகளையும் வென்ற படமாக ‘ஷெர்ஷா’ அமைந்தது. அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணி இணைந்த ‘பில்லா, ஆரம்பம்’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்கள்.

மீண்டும் அஜித் நடிக்கும் தமிழ்ப் படம் ஒன்றை விஷ்ணுவர்தன் இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால், அவரது அடுத்த படம் ஹிந்தியில்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கரண் ஜோஹர் தயாரிக்க, சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை விஷ்ணு இயக்கப் போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் முடிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் 2024 கிறிஸ்துமஸ் தினத்தை படத்தை வெயிட திட்டமிட்டுள்ளார்களாம்.

The post விஷ்ணுவர்தன்-சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் புதிய படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Salman ,vishnuwardan ,Ajith ,Billa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு