×

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பட்டா கோரி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்

துரைப்பாக்கம்: கிழக்கு  கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து  குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு  பிறப்பித்திருந்தது. அதன்பேரில்  வருவாய்த்துறை அதிகாரிகள்  குடியிருப்புகளை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுமார் 30 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து வந்தார். இந்நிலையில், இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால்  நாங்கள் எங்கு செல்வது என நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதற்கு, மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது  என்பதால், இந்த இடத்தை காலி செய்ய தயார் என குடியிருப்புவாசிகள் உத்தரவாதம் அளித்தால் உத்தரவு  பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு  நிலத்தை ஒதுக்கீடு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,  ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்,  நீதிமன்றம் கூறியதைப் போல, தற்போதைய இடத்தை குறிப்பிட்ட கால  அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று  இடம் வழங்குவது தொடர்பான மனுதாரர் சங்க கோரிக்கையை பரிசீலிக்க தயாராக  இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த 2015ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கெஜலட்சுமி பரிந்துரை செய்த 2 சென்ட் பட்டாவை வழங்க கோரியும் நேற்று அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பெத்தேல் நகர் பகுதியிருந்து  கிழக்கு கடற்கரை சாலை இரு பக்ககமும் கையில் பதாகைககள் ஏந்தியபடி பங்கேற்றனர். மகளிர் தினமான நேற்று ஏராளமான பெண்கள்  தங்கள் குந்தைகளை கையில் வைத்துக்கொண்டும், கணவன், மனைவி என குடும்பத்தோடு பட்டா வழங்க வலியுறுத்தி, கிழக்கு கடற்கரை  சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

The post ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பட்டா கோரி பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bethel ,Engambakkam ,Durai Pakkam ,Bethel Nagar ,East Coast Road ,Enchambakkam ,
× RELATED திருவான்மியூரில் கழுத்து அறுத்து...