×

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட உடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதிதான் இறந்தாரா? அப்போலோ டாக்டர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளாக நேற்று நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம், இதயவியல் நிபுணர் மதன்குமார், தோல் மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அப்போது மதன்குமார் கூறியதாவது, டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. இதனால், அவரது உயிரை காக்கும் வகையில் உரிய முறையில் அனைத்து சிகிச்சையும் தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்டது என்றார்.இதைத் தொடர்ந்து சசிகலா வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கு, மருத்துவர் ரவிச்சந்திரன் கூறியதாவது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கை, கால்களில் இருந்த தோல் அலர்ஜிக்கு 2 முறை சிகிச்சை அளித்தேன். பிறகு மருத்துவர் சிவக்குமார் வேண்டுகோளுக்கு ஏற்ப மருத்துவர் பார்வதி தேவி, தோல் சம்பந்தமான அலர்ஜிக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தேன். மேலும், பார்வதி தேவி சிகிச்சை அளித்த கால கட்டத்தில் உடல் சோர்வு, நீரழிவு நோய் மற்றும் நடப்பதற்கு சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் தனக்கு இருப்பதாக ஜெயலலிதா மருத்துவர் பார்வதியிடம் கூறினார். அவர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார் என்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு என்ன வகையான மருந்துகள், எத்தனை காலக்கட்டத்திற்கு மருத்துவர் பார்வதி தேவி ஜெயலலிதாவிற்கு வழங்கினார் என்று எய்ம்ஸ் மருத்துவ குழு கேள்வி எழுப்பினர். இதற்கு, டாக்டர் ரவிச்சந்திரன், என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது என்ற விவரம் எனக்கு தெரியாது. ஆனால், ஓரால் ஸ்டீராய்டு மருந்து பரிந்துரைத்ததாக கூறினார் என்றார் ரவிச்சந்திரன். இதே போன்று மருத்துவர் மீனாட்சி சுந்திரத்திடம் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, நரம்பு தொடர்பான பிரச்னை குறித்த பரிசோதனை ஜெயலலிதாவுக்கு எந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது, மீனாட்சி சுந்தரம் 2016ல் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது மணி 7.30 மணி முதல் 8 மணிக்குள் இருக்கும். அவர் பரிசோதனையின் போது என்னிடம் எதுவும் பேசவில்லை என்று கூறினார். இந்த விசாரணைக்கு பிறகு ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட போது, அவர் உயிரை காப்பாற்ற எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர் மதன் குமார் ஏற்கனவே சாட்சியம் அளித்து இருந்தார். ஆனாலும், அவரிடம் சில விளக்கம் வேண்டும் என்பதால் குறுக்கு விசாரணை மேற்கொண்டோம். கடந்த 2016ல் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த போதே அவர் மரணம் அடைந்து விட்டாரா என்று ஆணையம் கேட்டிருந்தது. அதற்கு டாக்டர் மதன்குமார் இல்லை எனக்கூறினார். ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பிறகு கூட அவர் இதயத்தை துடிக்க வைப்பதற்காக ரத்த ஓட்டத்தை சீர்படுத்த எடுத்த முயற்சியை இறப்பு என்று கூற முடியாது. அதை அவரிடம் கேட்டு உறுதிப்படுத்தினோம். 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு டிவி தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போது அந்த வார்டில் தான் எல்லா முயற்சி செய்து, ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு அவர் பேசினார்.* கார்டியாக் அரெஸ்ட்டின்போது பின்பற்றப்பட்ட மருத்துவமுறை என்ன?முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. அப்போது, ஜெயலலிதா இருந்த வார்டிலேயே அவரது நெஞ்சை பிளந்து இதயத்தை இயக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அந்த வார்டில் ரத்தம் பீறிட்டு வந்ததாக ராமமோகன் ராவ் வாக்குமூலம் அளித்தார். பஞ்சை வைத்து அழுத்திய போதும் ரத்தம் வெளியேறியதாகவும், மேலும், அவர், ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லாமல் இங்கேயே வைத்து இயக்காலாமா என்று கோபத்துடன் டாக்டர்களை பார்த்து கேள்வி எழுப்பியதாகவும், அதன்பிறகே ஆபரேஷன் தியேட்டருக்கு ஜெயலலிதாவை அழைத்து சென்றதாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். தொடர்ந்து ஆபரேஷன் தியேட்டரில் சுவாச கருவி பொருத்தப்பட்டதாகவும், அதன்பிறகு எக்மோ கருவி ெபாருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்ததாகவும் கூறியிருந்தார். நெஞ்சை பிளந்து இயக்க வைக்கும் சிகிச்சை முறைகள் நமது நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி அப்போது  எழுந்தது. ஆனால், தற்போது சரியான முறையில் சிகிச்சை அளித்து இருப்பதாக டாக்டர் மதன்குமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.* தினமும் ரூ.15 ஆயிரம் வரை செலவுஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி ஆணையத்தில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி ஆறுமுகசாமி, நான் விசாரணையை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் விசாரணை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை அரசு பணம் செலவாகிறது. எனவே, விசாரணையில் காலம் தாழ்த்தாமல் முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்….

The post கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட உடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதிதான் இறந்தாரா? அப்போலோ டாக்டர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jayalalithah ,Chennai ,PTI ,Arumumusamy Commission ,Former ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...