×

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்: போரில் பங்கேற்பதால் பெற்றோர் அதிர்ச்சி

கோவை: கோவை  துடியலூர். சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள்.  மூத்த மகன் சாய் நிகேஷ் (22), 2018 செப்டம்பரில் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகர தேசிய விண்வெளி அறிவியல் பல்கலையில் படிக்க சென்றார். அடிக்கடி பெற்றோரிடம் பேசி வந்தார். கேம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றுவதாகவும் பெற்றோரிடம் கூறினார். சில நாட்களுக்கு வீடியோ காலில் பேசியபோது கோவை வருமாறு பெற்றோர் அழைத்தனர். அப்போது சாய் நிகேஷ், ‘‘நான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளேன். தற்போது போரில் ஈடுபட்டு வருவதால் ஊருக்கு வரமுடியாது’’ எனக்கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ‘‘எப்போது ராணுவத்தில் சேர்ந்தாய்? அந்த வேலை வேண்டாம், உடனே நம் ஊருக்கு வா’’ எனக்கூறினர். ஆனால் அதை சாய் நிகேஷ் ஏற்கவில்லை. இது தொடர்பாக பெற்றோர் போலீசாரிடமும், தூதரகத்திலும் முறையிட்டு, மகனை மீட்டு தரகோரிக்கை விடுத்துள்ளனர். சாய்நிகேஷ் 2018ல் காரமடை தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார், இந்திய ராணுவத்தில் சேர முயற்சி செய்துள்ளார். உயரம் குறைவு காரணமாக 2 முறை நடந்த தேர்வில் நிராகரிக்கப்பட்டார். தொடர்ந்து இவர் அமெரிக்க ராணுவத்தில் சேர அமெரிக்க தூதரகத்தின் மூலம் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நாட்டிலும் ராணுவ வேலை கிடைக்கவில்லை. உக்ரைனில் படிக்க சென்ற இவர் போர் துவங்கும் முன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இந்த தகவலை பெற்றோரிடம் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார். அவர்கள் கோவைக்கு அழைத்தபோதுதான் உண்மையை கூறியுள்ளார். பெற்றோர் வற்புறுத்தலை தொடர்ந்து சாய் நிகேஷ் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இந்திய வெளியுறவுத்துறை மூலமாக மகனை கோவைக்கு வரவழைக்க அவர்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர். வரும் ஜூலை மாதம் சாய் நிகேஷ் படிப்பு காலம் முடிகிறது. உக்ரைனில் இவர் துப்பாக்கியுடன் போர் களத்தில் நிற்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் சாய் நிகேஷ் குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர்.* சிறு வயதிலேயே மிலிட்டரியில் ஆர்வம் பள்ளி முதல்வர் தகவல்உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ள கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் படித்த துடியலூர் தனியார் பள்ளி முதல்வர் மணிமாறன் கூறுகையில், ‘‘எங்கள் பள்ளியில் சாய்நிகேஷ் 1 முதல் 10ம் வகுப்பு வரை படித்தார். எப்போதும் விமானப்படை, மிலிட்டரியில் சேருவது பற்றிதான் பேசுவார். எப்படியாவது விமான படிப்பு படிக்க வேண்டும். ஆர்மியில் சேர வேண்டும் என இருப்பார். பள்ளியின் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டார். சின்ன வயதில் ஆங்கில நாளிதழ்களில் வரும் ராணுவம் சார்ந்த புகைப்படங்கள், செய்திகளை கட்டிங் செய்து சேமித்து வைத்து ஆல்பம் தயாரித்து வைத்து இருந்தார். அவரது ஆசையை நிறைவேற்ற வாய்ப்பு அளித்த நாட்டிற்காக தற்போது போராடி வருகிறார்” என்றார்….

The post உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்: போரில் பங்கேற்பதால் பெற்றோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ukraine army ,Dudiyalur ,Ravichandran ,Subramaniampalayam ,Jhansi Lakshmi ,Ukraine ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...