×

தூத்துக்குடியில் புதுப்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவர் உட்பட 3 பேர் சரண்

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களது மகள் மாரிசெல்வியை (19), 5 மாதத்திற்கு முன் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பொன்ராஜுக்கு (27) திருமணம் செய்து வைத்தனர். ஒரு வாரத்திற்கு முன், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு பொன்ராஜ், மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பினார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாமியார் வீட்டிற்கு நண்பர்கள் 2 பேருடன் வந்த பொன்ராஜ் கதவை தட்டி தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினார். வெளியே வந்த மாரிசெல்வியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த மாரியம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்….

The post தூத்துக்குடியில் புதுப்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவர் உட்பட 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Tutukudi ,Chamari ,Muttikudi ,Saran ,Thuthukudi ,Thuthukudi Thalamuthunagar ,Palathandayutha ,Maricelwi ,Tuttukudi ,
× RELATED “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக்...