×

பொல்லாத கொரோனா: லேசான பாதிப்புக்கே மூளை சைஸ் குறையும்

புதுடெல்லி: லேசான கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட சம்பந்தப்பட்ட நபருக்கு மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என்று லண்டன் ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு மூளை தொடர்பான அசாதாரண பாதிப்புக்களை ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதில் பெரும்பாலான ஆய்வுகள் கடுமையான நோய் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டுள்ளது. இந்நிலையில், லேசான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டாலே அது மூளையை பாதிக்கும் என்று லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை நேற்று முன்தினம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு சராசரியாக 4.5 மாதங்களுக்கு பின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 785 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், மூளையில் திசு சேதம், வாசனை அறிதல் பாதிப்பு, மூளையின் அளவு சுருங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்குமா? அல்லது குறைந்த நாட்களில் மாறுமா? என்பது குறித்து மேலும் ஆய்வு செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. * 3வது அலை முடிந்ததுநாட்டில் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்துள்ளதாக வைரலாஜி மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர்  ஜான் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இருந்தது. ஜனவரி 21ம் தேதி ஒரே நாளில் 3,47,254 தொற்று பாதிப்புக்கள் பதிவானது. தற்போது நாட்டில் புதிய தொற்று பாதிப்பு 3,993 ஆக பதிவாகி உள்ளது. எனவே மூன்றாவது அலை முடிவுக்கு வந்துள்ளது என நம்பிக்கையுடன் முடிவு செய்யலாம். எதிர்பாராத வைரஸ் மாறுபாடு உருவாகாத வரை நான்காவது அலை ஏற்படாது,’ என்று அவர் கூறினார். * 4 ஆயிரத்துக்குள் வந்தது பாதிப்பு ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 நாட்களில் பதிவான தினசரி கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும். மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,29,71,308 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 83 பேர் உட்பட 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 5,15,210 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 49,948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி புதிய பாதிப்பு 0.46 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு 0.68 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் 179.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. …

The post பொல்லாத கொரோனா: லேசான பாதிப்புக்கே மூளை சைஸ் குறையும் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,London Oxford University ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு