×

திருவீதியுலாவுக்கு சிம்ம, கருட, யானை வாகனங்களை கோயில்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள சுவாமி புறப்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு திருவிழாக்களுக்கு தயார் நிலையில் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.அதன்படிபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சமயபுரம்  மாரியம்மன் கோயில், ரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மற்ற உற்சவங்கள் நடைபெறும் பல்வேறு திருக்கோயில்களில் சுவாமி வாகனங்களான ரிஷப வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேணு வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், குதிரை வாகனம், பைரவர் வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்பட பல்வேறு சுவாமி வாகனங்கள் பழுது பார்த்து செப்பனிட்டு பக்தர்கள் மனம்மகிழும் வகையில் வருடாந்திர உற்சவ காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயாராக வைக்க வேண்டும். தற்போது கொரோனா தளர்வுகள் நீக்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வேண்டுகோளின்படி திருவிழாக்களில் சுவாமி வாகனம் உலா வர அனுமதிக்கப்பட்டு கோயிலின் உட்பிரகாரங்களில் தங்கத்தேர்கள் மற்றும் வெள்ளித்தேர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மரத்தேர்களும் பழுதுகள் இருந்தால் பழுதுகள் நீக்கப்பட்டு திருத்தேர்கள் வீதியுலா வருகின்றன. தற்போது பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது சுவாமி திருவீதியுலா வருவதற்கு ஏற்றவாறு வாகனங்களின் அடிப்பகுதியில் உள்ள படிச்சட்டங்கள் சீரமைக்கும் பணி மற்றும் பழுதடைந்துள்ள பாகங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது….

The post திருவீதியுலாவுக்கு சிம்ம, கருட, யானை வாகனங்களை கோயில்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Shimma ,Karuda ,Elephant ,Minister ,B. K.K. Segarbabu ,Chennai ,Hindu Relic Fisheries ,P. K.K. ,Segarbabu ,Sawami ,Thirukoils ,Tamil Nadu ,Tiruvithiulah ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!!