×

ஐடி ஊழியர் வீட்டில் 3 லேப்டாப் திருட்டு

ஆவடி: திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மதன்(36). இவர் சென்னை அடுத்த சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் முத்துலட்சுமி. இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். முத்துலட்சுமி திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மதன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றார். பின்னர், மீண்டும் அவர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், வீட்டில் இருந்த 3 லேப்டாப்கள், ஒரு செல்போன் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் வீட்டை சுற்றி பார்த்தார். அப்போது பாத்ரூமில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு மர்ம நபர்கள் உள்ளே வந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post ஐடி ஊழியர் வீட்டில் 3 லேப்டாப் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Madan ,Thirumullaivayal Thirumalaivasan Nagar ,Ciruseri, Chennai ,Dinakaran ,
× RELATED போடியில் சத்துணவு ஊழியர்களுக்கான...