×

20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய நிலையில் வேகமாக வற்றி வரும் பெரியகுளம் கண்மாய்

சிவகாசி : சிவகாசி நகரின் குடிநீர் ஆதாரமான பெரியகுளம் கண்மாய் வேகமாக வற்றி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.சிவகாசி சுற்று வட்டார பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் கன மழை ெபய்தது. இந்த மழைக்கு சிவகாசியை சுற்றியுள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. சிவகாசி நகரில் உள்ள பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. சிவகாசி நகரில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. போர்வெல் கிணறுகளில் நீர் வற்றியதால் நகராட்சி குடிநீரை மட்மே மக்கள் நம்பி இருந்தனர்.சிவகாசியை சுற்றியுள்ள பகுதியில் ஆடு, மாடு அதிகம் வளர்க்கப்படுகிறது. இவற்றிற்கு தீவனம்,தண்ணீர் கொடுக்க முடியாத நிலை இருந்தது. குளங்களில் தண்ணீர் வற்றி கிடந்ததால் ஆடு மாடுகள் வாறுகாலில் தேங்கியிருந்த கழிவுநீரை குடிக்கும் அவல நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபரில் தமிழகம் முழுவதும் பருவ மழை கொட்டி தீர்த்தது. இதில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியது. இதனால் சிவகாசி நகர் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி யடைந்தனர்.கண்மாய் நிறைந்தவுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கண்மாயில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்மாய் பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதால் டியூப்களில் காற்று நிரப்பி படகு சவாரி செய்தனர். இதனிடையே கடந்த சில தினங்களாக கோடை வெயில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் பெரியகுளம் கண்மாய் நீர் வேகமாக வற்றி வருகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்….

The post 20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய நிலையில் வேகமாக வற்றி வரும் பெரியகுளம் கண்மாய் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Periyakulam ,Sivakasi Nagar ,Chivagasi ,Circuit ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை