×

பல்வேறு புகாருக்கு ஆளாகியுள்ள அரசு பள்ளி தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்-பள்ளி மேலாண்மை குழு, கலெக்டரிடம் மனு

நாகை : நாகை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கடந்த 2 ஆண்டு காலமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதால் விவசாயிகள் குறைதீர், பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் வழக்கம் போல் நடந்தது வருகிறது. இதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கோரிக்கை அடங்கிய பல்வேறு மனுக்கள் வந்தது.வேலை கேட்டு மனு: நாகை தருமகோயில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவர் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது கணவர் சசிக்குமார்(40). லோடுமேனாக வேலை செய்து வந்தார். திடீரென வாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக உள்ளார். எங்களுக்கு ராகவி, நேத்திரா, கலிபாலன் என 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் படுத்தப்படுக்கையாக இருப்பதால் வருமானம் இன்றி குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்ப நடத்த கஷ்டப்படுகிறேன். எனவே ஏதாவது வேலை வழங்கி உதவுமாறு தெரிவித்துள்ளார்.தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை: நாகை அருகே அகரகடம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் முருகேசன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி வருகிறார். இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பள்ளி மாணவர்களிடம் ஆபாசமாகவும், அருவறுக்கத்தக்க வகையில் இரட்டை அர்த்தத்துடன் பேசுகிறார். பெண் குழந்தைகளை பள்ளி நேரம் முடிந்தும் பள்ளியின் உள்ளேயே வைத்திருப்பதும், மாணவர்களுக்கு எந்தவித பாடங்களும் எடுக்காமல் டீ வாங்குவதற்கும், உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் அனுப்புவது, பள்ளி நிதியை முறைகேடாக பயன்படுத்துவது, பள்ளி பணி நேரங்களில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது, பெற்றோர்களை ஒருமையில் பேசி மிரட்டுவது போன்ற ஒழுங்கீனமான முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்….

The post பல்வேறு புகாருக்கு ஆளாகியுள்ள அரசு பள்ளி தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்-பள்ளி மேலாண்மை குழு, கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagi Collector's Office ,coronavirus pandemic ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...