×

ஐசிசி மகளிர் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மவுன்ட் மவுங்கானுயி: மகளிர் உலக கோப்பையில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்தது. மந்தனா 52 ரன் (75 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தீப்தி 40 ரன், பூஜா வஸ்த்ராகர் 67 ரன் (59 பந்து, 8 பவுண்டரி) விளாசினர். ஷபாலி (0), கேப்டன் மிதாலி 9, ஹர்மன்பிரீத் 5, ரிச்சா 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஸ்நேஹ் ராணா 53 ரன், ஜுலன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 43 ஓவரில் 137 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சிட்ரா அமீன் 30, டயானா பெய்க் 24, பாத்திமா சனா 17 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி கெயக்வாட் 4, ஜுலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ராணா தலா 2, மேக்னா சிங், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிறந்த வீராங்கனையாக பூஜா வஸ்த்ராகர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. அடுத்து இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் மார்ச் 10ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை, இந்திய மகளிர் அணி தக்கவைத்துக் கொண்டது….

The post ஐசிசி மகளிர் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : ICC Women's World Cup ,India ,Pakistan ,Mount Maunganui ,Women's World Cup ,Dinakaran ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...