×

ரூ.4,755 கோடி மதிப்பீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.4,755 கோடி மதிப்பீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தூத்துக்குடீ சிப்காட்டில் பர்னிச்சர் பூங்கா திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச பூங்கா அமைகிறது. தமிழக அரசின் 33 புதிய திட்டங்களின் மூலம் 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.  தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலேயே முதன் முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.  75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் ரூ.150.4 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ஆகியோர் உடனிருந்தனர். …

The post ரூ.4,755 கோடி மதிப்பீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Thoothukudi ,MoUs ,M.K.Stall ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...