×

பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு கூட்டம்

சென்னை: பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மற்றும் கிளை நூலகங்களில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் பெறுவதற்காக பொது நூலக இயக்குனரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 514 தமிழ் பருவ இதழ்கள் மற்றும் 168 ஆங்கிலப் பருவ இதழ்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் பெரும்பாலானவை நிறுத்தம் செய்யப்பட்டவையாகவும், வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்களும் அடங்கியுள்ளன. எனவே வாசகர்கள் மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படையில் பட்டியலை மறுசீரமைப்பு செய்வதற்கு 10 துறை சார் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஒன்றினை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வுக் குழுவில் இணைய இதழ் ஆசிரியர் சமஸ், கட்டுரையாளர்கள் ஜெயராணி, தினேஷ் அகிரா, மருத்துவர் கு.கணேசன், அதிஷா வினோ, சுட்டி கணேசன், யுவராஜ், பேராசிரியர்கள் விஜயபாஸ்கர், வீ.அரசு, கரு.ஆறுமுகத் தமிழன்,போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர் அருண்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தேர்வு குழுவின் கூட்டம் 6.3.2022 அன்று சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதழ்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விவாதிக்கபட்டன. இந்தியாவில் வெளியாகும் அனைத்து இதழ்கள் மற்றும் நூல்கள் பொது நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் நாளிதழ்கள் அனுப்புகை சட்டம் 1954 ன்படி, கன்னிமாரா பொது  நூலகம் உள்ளிட்ட 4 வைப்பக நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். எனவே கன்னிமாரா நூலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் இதழ்களிலிருந்து பொது  நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்யப்படும் என்று குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட நடைமுறையின்படி இதழ்களை வைப்பக நூலகத்திற்கு அனுப்பாத இதழ்கள் உடனடியாக மூன்று இதழ்பிரதிகளை கன்னிமாரா பொது நூலகத்திற்கு ‘பொது நூலக இதழ் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு’ என்று குறிப்பிட்டு நூலகர், கன்னிமாரா பொது நூலகம், பாந்தியன் சாலை , எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது. மார்ச்-12 ஆம் தேதி வரை கன்னிமாரா நூலகத்தில் பெறப்படும் இதழ்கள் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Public Library Department ,Days ,Auba ,Librarians ,
× RELATED இன்றும் பல மாவட்டங்களில் வெயில்...