×

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடக்கம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான ஆணையம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் விசாரணையை தொடங்குகிறது. மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது.  இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை  தொடர முடியாமல் போனது.  பின்னர்  உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி  8 பேர் கொண்ட எய்ம்ஸ்  மருத்துவக்குழு நியமிக்கப்பட்டது.  தொடர்ந்து 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவை மாற்றியமைத்து, மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை  90% முடிவடைந்த நிலையில்,  அடுத்தக்கட்ட விசாரணை தொடர்பான ஆலோசனையில்  சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆணையத்திற்கு  பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். அதன்படி  அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த இன்று ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்வார் என கூறப்படுகிறது.  இந்த விசாரணையின் போது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர்கள் குழு வீடியோ கான்பரசிங் மூலமாக பங்கேற்பார்கள் என தகவல் கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணம்  தொடர்பாக விசாரணை நடத்த  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையத்தை தமிழக  அரசு அமைத்தது.  ஓராண்டுக்கும் மேலாக   ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் , செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என 154 பேரிடம்  விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது….

The post ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Arumuga Sami Commission ,Jayalalithaa ,Chennai ,Justice ,Arumuga Samy ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...