×

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு; நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் என்பவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. மேலும் சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் கழுத்தில் நான்கு வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து சதீஷ்குமார் மரணம் குறித்து முதலாவதாக விசாரித்த சி.பி.ஐ, அதனை தற்கொலை என்று முடிவு செய்தது. ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கொலை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் சதீஷ்குமார் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற மர்மம் நீடித்து வந்தது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பசந்த், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் பிரபாகரன், ராம்சங்கர் ஆகியோர் ஆஜராகி, ‘சங்கரசுப்பு மகன் வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கிட்டதட்ட ஓராண்டாக நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்றனர். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘சங்கரசுப்பு மகன் கொலை வழக்கை சிபிசிஐடி தொடர்ந்து விசாரித்து வருகிறது. விசாரணையில் ெதாய்வு ஏதும் இல்லை’ என்றார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி சந்திரசூட், ‘இவ்வழக்கு தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த விபரங்கள் இல்லை. எனவே, வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்த நிலை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார். …

The post வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண வழக்கு; நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sankarasupu ,Supreme Court ,CBCID ,New Delhi ,High Court ,Sankarasuppu ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...