×

கோபப்படும் ஹூமா

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்துடன் ‘காலா’, அஜித் குமாருடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் நடித்த ‘தர்லா’ என்ற படம் ஓடிடியில் வெளியானது. தற்போது ‘பூஜா மெரி ஜான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் திரைப்பட விமர்சகர்கள் மீது கடும் கோபம் கொண்டு சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திரைப்படங்களை விமர்சனம் செய்வதைவிட, சிலர் விமர்சனம் என்ற பெயரில் நடிகர், நடிகைகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுகின்றனர்.

படம் பிடிக்கவில்லை என்றால் பிரச்னை இல்லை. அது அவர்கள் விருப்பம். ஆனால், ஏன் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, பலபேருக்கும் நடந்திருக்கிறது. ஒரு விமர்சகருக்குப் படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதற்காக தனிப்பட்ட முறையில் அவதூறு பேசுவதும், உருவ கேலி செய்வதும் கூடாது. எதிர்மறை கருத்துகள் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்றார்.

The post கோபப்படும் ஹூமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Huma ,Bollywood ,Huma Qureshi ,Rajinikanth ,Ajith Kumar ,OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...