×

வேட்டு வச்சிராதீங்க என புலம்பும் இலை கவுன்சிலர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அட்வான்ஸ் ெகாடுத்துட்டு சாராய விற்பனை செய்றாங்களாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.  ‘‘கிரிவலம் மாவட்டம் போளூர் தாலுகாவுல சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருதாம். இதுல குறிப்பா அல்லி நகரம், செங்குணம், எட்டிவாடி உள்ளிட்ட பகுதிகள்ல சாராய விற்பனை ெகாடிகட்டி பறக்குதாம். இதனை தடுக்க வேண்டிய கலால் காக்கிகளும் கண்டுக்கறதில்லையாம். கலால் காக்கிங்க சாராய விற்பனைய தடுக்காம, சாராயம் விற்பனை சிறப்பாக நடக்க துணை போறாங்களாம். அந்த ஏரியாவோட 3 ஸ்டார் காக்கி, சாராயம் விற்பனை செய்யவும், புதிதாக சாராய விற்பனை தொடங்கவும் அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு முழு ஒத்துழைப்பு கொடுக்குறாராம். இதன்மூலம் 3 ஸ்டார் காக்கியோட காட்டுல பணமழை பெய்யுதாம். இதனால அங்கு 20க்கும் மேல சாராய வியாபாரிங்க இருக்குறாங்களாம். இவங்க மூலமா காக்கிகளுக்கு நல்ல சம்திங் கிடைக்குதாம். மாவட்ட உயர்காக்கி விசாரிச்சு, சாராய விற்பனைக்கு அட்வான்ஸ் வாங்குறதா புகார் எழுந்திருக்குற 3 ஸ்டார் காக்கி மேல நடவடிக்ைக எடுப்பதோடு, சாராய விற்பனை செய்றவங்க மேலயும் கடும் நடவடிக்கை எடுக்கணும்னு, பப்ளிக்கிட்ட இருந்து புகார்கள் எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேட்டு வெச்சுராதீங்கப்பானு புலம்புறாராமே புது கவுன்சிலரு…’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை  மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அசுர பலத்தில் வென்றுள்ளதால் அதிமுக  அணியால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை உள்ளது. மேயர், துணை மேயர் தேர்வை  தொடர்ந்து மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர்கள் தேர்வும் மிக விரைவில்  நடைபெற உள்ளது. இவை அனைத்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கே  ஒதுக்கப்படும் நிலை உள்ளது. அதனால், வெறும் 3 கவுன்சிலர்களை மட்டுமே   வைத்துள்ள அதிமுக நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என ஒதுங்கி நிற்கிறது.  கொஞ்ச நாள் பார்த்துவிட்டு, பேசாம, ராஜினாமா செய்துவிட வேண்டியதுதான் என  அதிமுக தலைகள் புலம்புகின்றனர். இந்த 3 கவுன்சிலர்களில்,  ஒருவர் மட்டும்  பழைய கவுன்சிலர்.  இவர், நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். மற்ற  இருவரும் புதுமுகங்கள். இந்த இரு புதுமுகங்களும், தங்களது பதவி பாதியில்  பறிபோய்விடுமோ… என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். ரொம்பவும் கஷ்டப்பட்டு,  இப்போதுதான் முதல்முறையாக ஜெயிச்சிருக்கோம்… அதுக்கும் வேட்டு  வெச்சிராதீங்கப்பா… என புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இலை தரப்பு விசுவாசி இன்னும் தன் வேலையை காட்டி வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமா…  இந்த கூட்டுறவு வங்கியின் குழலூதும் கடவுள் பெயரை பின்னால் கொண்ட  உயரதிகாரி இருக்கிறார். இலைக்கட்சியின் துணைத்தலைமைக்கும், தாமரை  தலைமைக்கும் தன்னை நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டு, துறை அமைச்சர்  பங்கேற்கும் விழாக்களை, அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறாராம்.  வங்கி தலைவரான இலைக்கட்சியின் முன்னாள் மாநகராட்சி தலைமையானவரின்  பல்வேறு முறைகேடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார்;  அத்தோடு,  இலைக்கட்சி ஆதரவு அலுவலர்கள் தவிர்த்து மற்றவர்களைக் கணக்கிட்டு பல்வேறு  புறக்கணிப்புகளையும் தொடர்வதாக இவர் மீது புகார்கள் குவிகின்றன. இதனால்  மொத்த ஊழியர்களும் கொதிப்படைந்து, அதிகாரிகள், துறை அமைச்சர் துவங்கி,  மேல்மட்டம் வரையிலும் புகார்களை குவித்து வருகிறார்களாம்…’’ என்றார்  விக்கியானந்தா.‘‘நகர செயலாளர் மீது இலைகட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சேதி கசியுதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி  சோழன் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் இலை கட்சி  படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு முழு பொறுப்பு கட்சியின் நகர  செயலாளர் தான் என தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகிறார்களாம். கடந்த 10  ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது நகர செயலாளர், தனக்கு வேண்டியவர்களை  மட்டுமே செழிக்க செய்தாராம். மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் அறவே  புறக்கணிக்கப்பட்டதாம். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,  யாருக்கு சீட் கொடுத்தாலும் தோல்வி நிச்சயம் தான், இருந்தாலும் தனக்கு  வேண்டியவர்களுக்கு மட்டுமே நகர செயலாளர் சிபாரிசால் சீட்  கொடுக்கப்பட்டதாம். இதனால் இலை கட்சியின் தொண்டர்கள் நகர செயலாளர் மீது  கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இப்படியே சென்றால் விரைவில்  இலைகட்சியில் கோஷ்டி மோதல் ெவடிக்க போவதாக மாவட்டம் முழுவதும்  கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. …

The post வேட்டு வச்சிராதீங்க என புலம்பும் இலை கவுன்சிலர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yananda ,Peter ,Kriwalam District ,Polur Thalukavula Ale ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது