×

அரசினர் மேல்நிலைபள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைபள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்  திடீர் ஆய்வு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பண்ருட்டி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பண்ருட்டி  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், பள்ளி ஆண்டாய்வு, பள்ளி வளாகம், வளர்ச்சி பணிகள் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது, துணை ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் காண்டீபன், முதுநிலை ஆசிரியர் ஜோதி, மண்டல உடற்கல்வி ஆய்வாளர் விசுவநாதன், ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்….

The post அரசினர் மேல்நிலைபள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District ,Education ,Razinar High School ,Sripurudur ,Kanchipuram District ,Primary Education ,Arasinar HC School ,Sripurudur District ,District Primary Education ,Dinakaran ,
× RELATED 18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு