×

16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வு.. 5 மாநகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களே வெற்றி!!

சென்னை : தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும் கும்பகோணத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். நாகர்கோவில், ஓசூர், தஞ்சை, காஞ்சிபுரம், கடலூரில் திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் போட்டியிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. *நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளும் பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்குகளும் பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் மகேஷை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள்ளார். *ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றுள்ளார். பரபரப்பாக நடந்த தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர். *கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி அடைந்தார். வாக்களித்த 32 கவுன்சிலர்களில் 20 வாக்குகள் பெற்று சுந்தரி வெற்றி பெற்றார். *தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார். *காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மகாலக்ஷ்மி வெற்றி பெற்றார்.50 வாக்குகளில் 30 வாக்குகள் பெற்று மேயரானார் மகாலக்ஷ்மி. போட்டி வேட்பாளராக களமிறங்கிய திமுக கவுன்சிலர் சூர்யா 20 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். …

The post 16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வு.. 5 மாநகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களே வெற்றி!! appeared first on Dinakaran.

Tags : Kajagam ,Chennai ,Tamil Nadu ,Sangagam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...